மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (45). இவரது மனைவி காவேரி (43). இவர்களுக்கு நிசாந்தி (13), பாப்பாத்தி (12), அஜீத் (5) என மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும், நேற்று மதியம் ஒரு மணியளவில் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அங்கு கணவன், மனைவியிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்து, காவேரியை கழுத்தை அறுத்து கொலை விட்டு, அங்குள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025