தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு காப்பு
பெரம்பலுார்:பெரம்பலுாரில் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுனருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையத்தைச் சேர்ந்த 28 வயது பெண், அருமடல் அரசு நடுநிலைப் பள்ளியில், ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார்.அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ், 41, பெண் ஆய்வக பயிற்றுனருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெரம்பலுார் எஸ்.பி., ஆதர்ஷ்பசேராவிடம் புகார் செய்யப்பட்டது. பெரம்பலுார் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து விமல்ராஜை கைது செய்தனர்.