உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / பஸ்சில் வாலிபர் சில்மிஷம் துவைத்தெடுத்த சிங்க பெண்

பஸ்சில் வாலிபர் சில்மிஷம் துவைத்தெடுத்த சிங்க பெண்

வேப்பந்தட்டை: பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வடகரையை சேர்ந்தவர் அப்துல் தாரிக், 34. திருமணமாகி குழந்தை உள்ளது. இவர், நேற்று காலை, அரசு பஸ்சில் பெரம்பலுாரிலிருந்து வடகரை சென்று கொண்டிருந்தார். அப்போது, முன் இருக்கையில் இருந்த பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.பஸ் வேப்பந்தட்டை பஸ் ஸ்டாப் வந்ததும், அப்துல் தாரிக்கை, அப்பெண் செருப்பால் சரமாரியாக தாக்கி, அவரை பஸ்சிலிருந்து இறக்கினார். அப்துல் தாரிக்கும், பதிலுக்கு அப்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவரை, அருகில் இருந்த வேப்பந்தட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று, வழக்கு விசாரணைக்கு வந்திருந்த பெண் எஸ்.ஐ., ஒருவரிடம் அவரை ஒப்படைத்தார். அரும்பாவூர் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ