உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 33. இவர், பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் அவர் கட்டி வரும் கலைஞர் கனவு இல்லத்தில், செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிக் கொண்டிருந்தார். அப்போது, குழியில் தென்பட்ட பாறையை மின்கருவியால் துளைத்து உடைக்கும் போது, ஒயரில் இருந்து, எதிர்பாராவிதமாக கசிவு ஏற்பட்டு, பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், துாக்கி வீசப்பட்டு அவர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாடாலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை