உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகை அரசு மருத்துவமனையில்ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

புதுகை அரசு மருத்துவமனையில்ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், வார்டுகளை சுகாதாரத்துடன் பராமரிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு, பொதுவார்டு மற்றும் ஆய்வகத்துக்குச் சென்ற அமைச்சர் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டினர்.வார்டுகள், கழிப்பறைகள் மட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தை முறையாக பராமரித்து சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும் என டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் பிரேத பரிசோதனைக்கான கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் ராமநாதன், இணை இயக்குனர் சூரியகலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் எட்வின், அ.தி.மு.க., நகரச் செயலாளர் பாஸ்கர் உட்பட மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி