மேலும் செய்திகள்
சுனைலிங்கம் ஜலகண்டேஸ்வரர் தரிசனம்
16-Feb-2026
அரசு பஸ் மோதி விபத்து; பெண் உட்பட இருவர் சாவு
12-Feb-2026
அலுவலகத்தில் வி.ஏ.ஓ., மர்ம சாவு
29-Jan-2026
புதுக்கோட்டை: 'புதுக்கோட்டை மாவட்டத்தில் சுனாமி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடித்து செப்டம்பர் மாதத்துக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்' என திட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் அப்பகுதி மக்களுக்கு இலவச வீடுகள் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. முத்துக்குடா, கடவாக்கோட்டை பகுதிகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மகேஸ்வரி, அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என திட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது சுனாமி திட்ட செயற்பொறியாளர் ராமசாமி, உதவி செயற்பொறியாளர் ராஜராஜசோழன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
16-Feb-2026
12-Feb-2026
29-Jan-2026