மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நபரிடம் 1.25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமதுபயாஸ், 42. இவரிடம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த முகமதுசுகைல், 32, என்பவர், அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யும் பணியினை சேர்ந்து செய்வோம் என்று கூறியிருக்கிறார்.மேலும் அவரிடம், 85 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார். ஆனால் தெரிவித்தப்படி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக பணியை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, தன்னிடம் பணம் இல்லை எனவும், மேலும், 50 லட்சம் ரூபாய் கொடுக்கும்படியும், ஏலச்சீட்டில் பணம் வந்ததும் திருப்பி தருவதாக கூறியிருக்கிறார்.முகமது பயாசும், 50 லட்சம் பணத்தை கொடுத்தார். அதன் பிறகும் மொத்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. 10 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். இதனால், ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்தததாக முகமதுசுகைல் மீது, புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முகமதுபயாஸ் புகார் அளித்தார்.அதன்படி, முகமதுசுகைலை, போலீசார் நேற்று கைது செய்தனர். முகமதுசுகைல், இதுபோல தமிழகத்தில் பலரிடமும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து, போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025