உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / 234 லட்சியம்; 200 நிச்சயம்: கட்சியினரை உசுப்பும் ரகுபதி

234 லட்சியம்; 200 நிச்சயம்: கட்சியினரை உசுப்பும் ரகுபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், குளத்துாரில், வடக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:தி.மு.க., எப்போதுமே ஒரு இலக்கு வைத்து தான் தேர்தலில் போட்டியிடும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கும் முன் கூட்டியே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படி இலக்கு நிர்ணயித்து போட்டியிட்டுத்தான், 40 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வென்றது. இவ்வளவு வெற்றி பெற்ற பின்னும், மத்திய இண்டி கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது, துரதிருஷ்டம் தான்.இப்போதைக்கு, 2026 சட்டசபை தேர்தலை நோக்கி நகர்கிறோம். அனைத்து, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தது, 200ல் வெற்றி பெறுவோம். தி.மு.க., தன் தொண்டர்களை நம்பியுள்ள இயக்கம்; தலைவர்களை நம்பியிருக்கும் இயக்கமல்ல. தி.மு.க., பெறும் வெற்றி அனைத்துக்கும் தொண்டர்கள் உழைப்பே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

இருவர் மயக்கம்

குளத்துாரில் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணியை பெறுவதற்காக, கூட்டத்தில் பங்கேற்ற 3,000 பேரும் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் தடுமாறி சிலர் கீழே விழுந்தனர். இதில், இருவர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மயக்கம் தெளிந்து பிரியாணி சாப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Shiva
செப் 04, 2024 20:03

200 ரூபாய் தானே?


Kumar Kumzi
செப் 04, 2024 13:08

ஓவாவுக்கும் ஓசிக்கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டு போடுற கூமுட்டைங்க இருக்கும் வரை டுமிழ்நாடு உருப்பட வாய்ப்பே இல்லை


Srinivasan Krishnamoorthi
செப் 04, 2024 12:29

அப்பச்சி ஆர்வம் புரியுது. இருந்தாலும் பைரவர் அவருக்கு மட்டும் கைகொடுப்பார். அவர் சார்ந்த கட்சிக்கல்ல. போகிற காலம் இது. புண்ணியம் சேர்க்க வழி பார்க்கலாம். காட்பாடியும் புதுக்கோட்டையும் இன்னும் இதை உணர வில்லையே என்ன செய்வது . விதி வலியதுதானோ


sridhar
செப் 04, 2024 11:58

மூணு படி லட்சியம் , ஒரு படி நாத்தம் பிடித்த சேப்பு அரிசி நிச்சயம் என்றார் ஒருவர் .


சுராகோ
செப் 04, 2024 08:31

நீங்கள் பூஜியம் எடுப்பது மக்களின் லட்சியமாக இருக்கவேண்டும். குறைந்த பட்ச்சம் இவர்கள் எதிர்க்கட்சியாக கூட இருக்க கூடாது என்பது நிச்சயமாக இருக்கவேண்டும்.


Duruvesan
செப் 04, 2024 09:39

பாஸ் ஆண்களுக்கு 1000 உரிமை தொகை, ஆக 234 அடிமைகள் அள்ளி கொடுக்கும், ஓட்டு கேட்டு போனால் இவனுங்க கேட்பது எவ்வளவு குடுப்பேன்னு,


karutthu
செப் 04, 2024 08:24

கனவு காணும் உரிமை அனைவருக்கும் உள்ளது அண்ணா திமுக வில் உட்கட்சி பிரச்சனைகள் உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் கனவு பலிக்காது பொறுத்திருந்து பார்ப்போம்


Svs Yaadum oore
செப் 04, 2024 07:41

பிரியாணியை பெறுவதற்காக, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் இருவர் மயக்கம் அடைந்தனராம் . அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மயக்கம் தெளிந்து மீண்டும் பிரியாணி சாப்பிட்டனராம் ...இப்படி ஒரு கேவலம் ....இவனுங்க வோட்டு போட்டு 234 லட்சியம் , 200 நிச்சயம்....


Duruvesan
செப் 04, 2024 07:33

234 ம் கண்டிப்பா ஜெயிப்பீங்க, ஜெயித்த உடன் ஆண்களுக்கும் உரிமை தொகை மாதம் 1000. ஓட்டுக்கு இந்த மாதிரி காசு குடுத்தா அது சட்டம் பூர்வமா இருக்கும். இப்போ ஹிமாச்சல் ல சம்பளம் இல்லை, விரைவில் அது போல பண்ணிடனும், அடிமைகள் ஓட்டு உங்களுக்கு தான்


vadivelu
செப் 04, 2024 07:14

நிச்சயம் நடக்கும். அத்தனை மைனாரிட்டி , பெரும்பால தலித்துக்கள் , குவாட்டரும் பிரியாணியும், ஆளுக்கு இரண்டாயிரம் .போதுமே நாற்பது விழுக்காடு வாக்காளர்கள் உங்க பக்கம்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை