உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / போக்சோவில் ஏ.ஹெச்.எம்., கைது

போக்சோவில் ஏ.ஹெச்.எம்., கைது

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், 58, பத்தாம் வகுப்பு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட குழந்தைகள் நல மைய அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டி.எஸ்.பி., குமார், அரிமளம் போலீசார், பெருமாள் மற்றும் மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நல மைய அலுவலர்கள் புகார்படி, திருமயம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, பெருமாளை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ