மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் உள்ள சத்குருநாதர்கள் மற்றும் ஜெகன்மாதா ஸ்ரீபுவனேஸ்வரி உத்தரவின்படி, பூஜை ஸ்ரீ ஓங்காரநந்த மகா சுவாமிகள் அருள் சங்கல்பத்தில் நடைபெற்று வரும் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜட்ஜ் சுவாமிகள் அதிர்ஷ்டானத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுவனேஸ்வரியின் கர்ப்ப கிரகத்தில் பக்தர்களால் 18 கோடிமுறை எழுதப்பட்ட 18,000 ஹ்ரீம் ஏகாக்ஷர மந்திர லேகந ஜப நோட்டுகள் பிரதிஷ்டியானது நேற்று இனிதே நடைபெற்றது.இவ்விழாவில் ஸ்ரீபுவனேஸ்வரி சன்னிதியில் ஹ்ரீம் ஏகாக்ஷர மந்திர ஜப நோட்டுகள் பூஜை செய்யப்பட்டு, பின்னர் ஆரத்தி காண்பித்து பக்தர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றது. லலிதா சஹ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. இவ்விழாவினை தவத்திரு பிரனவானந்த சுவாமிகள் தலைமை ஏற்று நடத்தினார். இதில், அறங்காவலர்களும், நுாற்றுக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025