மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி காஞ்சிரவயல் பகுதியை சேர்ந்த முருகன், 30, என்பவருக்கும் வயலோகம் அருகே முதலிபட்டியைச் சேர்ந்த சித்திகா, 20, என்பவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.முருகன், தன் தாய், தந்தை மற்றும் மனைவி சித்திகாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர், மார்ச் 28 அன்று இரவு, வீட்டில் உள்ள படுக்கை அறையில் உணர்ச்சியற்றுக் கிடப்பதாக சித்திகா தன் மாமனாரிடம் தெரிவித்துள்ளார்.அப்போது, உறவினர்கள் முருகனை, காரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின், உறவினர்கள் அவரது சடலத்தை அடக்கம் செய்தனர்.தொடர்ந்து, முருகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை வெள்ளைச்சாமி, காரையூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். மேலும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதனால், நேற்று இறந்த முருகனின் சடலம் தோண்டி எடுக்கபட்டு, பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025