மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
திருக்கோகர்ணம் : புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம் பகுதியில் தனியார் பல் கிளினிக் நடத்தி வருபவர் அப்துல் மஜீத், 37. இவரிடம் நேற்று முன்தினம் மாலை, தாயுடன் பள்ளி மாணவி ஒருவர் பல் சிகிச்சை பெறச் சென்றார். அப்போது, மாணவியை கண்டு சபலமடைந்த அப்துல் மஜீத், மாணவியின் தாயிடம் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்து, மருந்தை வாங்கி வருமாறு கூறி அனுப்பினார்.மாணவியின் தாய் சென்று விட்ட நிலையில், மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தார். பின், நடந்த விபரத்தை மாணவி, தன் தாயிடம் கூறவே, அவர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025