மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஈச்சன்விடுதி பகுதியில் உள்ள அக்னியாற்றின் குறுக்கே, 40 துாண்களுடன், 10 அடி ஆழத்தில் தொட்டி பாலம், 1939-ம் ஆண்டு கட்டப்பட்டது. தரைப்பகுதியில் அக்னியாறு தண்ணீரும், மேல்பகுதியில் ஆற்றின் குறுக்காக உள்ள பாலத்தில், கல்லணையில் இருந்து வரும் தண்ணீரும் செல்லும் வகையில், இந்த தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 31-ம் தேதி கல்லணை திறக்கப்பட்டதால், இந்த பாலத்தில் செல்லும் தண்ணீரை, பொதுமக்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தொட்டி பாலத்தின் பல இடங்களில் கசிவு ஏற்பட்டு, ஆங்காங்கே தண்ணீர் கசிந்து சொட்டுகிறது.தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கடைமடைப்பகுதியில் சில இடங்களில் தண்ணீரை தேக்கி திருப்பி விடும் ஷட்டர் பாலங்கள் முழுமையாக உடைக்கப்பட்டு உள்ளன. கால்வாய்க்குள் தடுப்புச்சுவர், தரைதளம், பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அந்தப் பணிகள் முடியும் வரை, காவிரி கடைமடைப் பகுதிக்கு தண்ணீரை குறைந்த அளவில் கல்லணையில் திறந்துள்ளனர்.பணிகள் முடிந்தவுடன் கல்லணை கால்வாய் தண்ணீர் வழக்கம்போல திறந்து விடப்பட்டால், இந்த, 40 துாண் தொட்டி பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் கசிந்து, பாலம் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது.தொடர்ந்து, அக்னியாறு மேலே உள்ள தொட்டி பாலத்தின் அருகே உள்ள சாலையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் கார், பைக் என வாகனங்களில் பொதுமக்கள் தினமும் பயணம் செய்கின்றனர். இந்த பாலத்தில் விபத்து ஏற்பட்டால், பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கடைமடைப் பாசனப்பகுதி 32,000 ஏக்கர் நிலங்களுக்கு, உரிய தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025