உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஆக்கிரமிப்பு அகற்றியதை கண்டித்து மக்கள் மறியல்

ஆக்கிரமிப்பு அகற்றியதை கண்டித்து மக்கள் மறியல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நமணசமுத்திரத்தில் சாலையை ஆக்கிரமித்து 16 கடைகள், 48 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, ஏற்கனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய கூறியும், அப்பகுதி பொதுமக்கள் காலி செய்யாததால் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் நேற்று 16 கடைகள், 48 வீடுகளை இடித்து அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், மதுரை - -புதுக்கோட்டை சாலையில் நமணசமுத்திரத்திரம் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நமணசமுத்திரத்திரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர். இதனால், அப்பகுதியில் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ