உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / அண்ணனை கொன்று உடல் எரிப்பு தம்பி உட்பட மூன்று பேர் கைது

அண்ணனை கொன்று உடல் எரிப்பு தம்பி உட்பட மூன்று பேர் கைது

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி காட்டாற்றில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் உடலை கடந்த 8-ம் தேதி ரெகுநாதபுரம் போலீசார் மீட்டனர். கொலை செய்யப்பட்டது யார் என, தனிப்படை போலீசார், அப்பகுதியில் மொபைல் போன் உரையாடல் பதிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமாக பல கோணங்களில் விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கரிக்காடிப்பட்டியை சேர்ந்த முருகானந்தம் மகன்கள் முல்லைவேந்தன், 23, முகிலன், 21, அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் இருவருடன் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி மகாராஜா சமுத்திர காட்டாற்று பாலம் பகுதியில், ஜூன் 8-ல் பைக்கில் சென்று மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில், முல்லைவேந்தனை மற்ற நான்கு பேரும் அடித்துக் கொலை செய்து, உடலை அங்கேயே எரித்து தப்பினர்.மது போதையில், குடும்பத்தினரிடம் அடிக்கடி முல்லைவேந்தன் தகராறில் ஈடுபட்டு வந்ததால், முகிலன் மற்றும் அவரது நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று, மது வாங்கிக் கொடுத்து கொலை செய்தது தெரிந்தது.தொடர்ந்து, முகிலன், அனீஸ்வரன், 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு 17 வயது சிறுவன் தலைமறைவான நிலையில், அவர் நேற்று புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காட்டிக்கொடுத்தமொபைல் சிக்னல்

முல்லைவேந்தன் கொலை செய்யப்பட்டு 20 நாட்களை கடந்தும் குற்றவாளிகளை கண்டறிய போலீசார் முதலில் திணறினர். பின், கொலை செய்து உடலை எரித்த பகுதியில் இருந்து, 500 மீட்டர் சுற்றளவில் மொபைல் போன் பயன்படுத்தியவர்கள் பட்டியலை போலீசார் தயாரித்தனர். அதன்படி, விசாரணை மேற்கொண்டனர். பின், 1,000, 2,000, 3,000 மீட்டர் சுற்றளவில் மொபைல் போனை பயன்படுத்தியவர்கள் பட்டியலை தயாரித்தனர்.இவ்வாறு, 3,000த்திற்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன் எண்களை வைத்து, சந்தேகப்பட்டவர்களிடம் போலீசார் விவசாரணை செய்து, அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.குற்றவாளிகளை கைது செய்ய, அந்த பகுதியில், குறிப்பிட்ட நாளில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் எண்களை அலசி, ஆராய்ந்ததில், குற்றவாளிகளை நெருங்க, 20 நாட்கள் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை