உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி; உறவினர் கைது

நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வாலிபர் பலி; உறவினர் கைது

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், 20, இவரது உறவினர் சரவணன், 21. இருவரும், நாட்டு துப்பாக்கியுடன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு புறப்பட்டனர். அவர்கள் எடுத்துச் சென்ற நாட்டுத்துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, வெல்டிங் பட்டறைக்கு எடுத்து சென்றனர். அங்கு வெல்டிங் செய்து கொண்டிருந்த போது, நாட்டுத் துப்பாக்கியில் நிரப்பி வைத்திருந்த, 'பால்ரஸ்' குண்டுகள் வெடித்துச் சிதறின. அந்த குண்டுகள், லட்சுமணன் வயிற்றில் பாய்ந்தன. பலத்த காயமடைந்த அவரை, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.அங்கிருந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட லட்சுமணன், சிகிச்சை பலனின்றி இறந்தார். இலுப்பூர் போலீசார், சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை