உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / வகுப்பறையில் அறியாமல் மலம் கழித்ததால் மாணவனை அடித்த ஹெச்.எம்., மீது வழக்கு

வகுப்பறையில் அறியாமல் மலம் கழித்ததால் மாணவனை அடித்த ஹெச்.எம்., மீது வழக்கு

புதுக்கோட்டை:மீமிசல் அருகே பள்ளி மாணவனை தாக்கியதாக, தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீழ ஏம்பல் கிராமத்தை சேர்ந்த முருகவேல் மகன் மாவீரன், 9; அதே ஊரில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை இவர், தன்னை அறியாமல் வகுப்பில் மலம் கழித்துள்ளார். இதற்காக, தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, மாணவனை அடித்துள்ளார். மாணவர் உடலில் காயங்கள் இருந்ததால், அவரது தாய் பொன்னுத்தாயி, தலைமை ஆசிரியரிடம் கேட்டுஉள்ளார். தலைமை ஆசிரியர், மாணவரின் தாயையும் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தாய், மகன் இருவரும், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புகார்படி, மீமிசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவில், மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா, நேற்று பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார். இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட போது, 'விசாரணை நடக்கிறது. தலைமை ஆசிரியர் அடித்தது உண்மை என்று தெரிய வந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி