யு டியூப் பார்த்து பிரசவம் பச்சிளம் குழந்தை இறப்பு
அறந்தாங்கி:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெரியசெங்கீரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர், 32. இவரது மனைவி அபிராமி, 25. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது.மருத்துவமனை செல்லாமல் ராஜசேகரும், அவரது தாயும் சேர்ந்து, யு டியூப் வீடியோ பார்த்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில், அபிராமிக்கு ஆண் குழந்தை பிறந்து சில நிமிடங்களில் இறந்தது. யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு அருகில் குழிதோண்டி குழந்தையை புதைத்தனர்.தகவலறிந்த ஆவுடையார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் விக்னேஷ் மற்றும் மருத்துவக்குழுவினர் ராஜசேகர் வீட்டில் விசாரித்து, ஆபத்தான நிலையில் இருந்த அபிராமியை, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.டாக்டர் விக்னேஷ் புகாரில் ஆவுடையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, ராஜசேகரிடம் விசாரிக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் இறந்த நிலையில், அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், இரண்டாவது குழந்தைக்கு வீட்டில் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.