உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / செயற்கையாக பழுக்க வைத்த பலாப்பழங்கள் அழிப்பு

செயற்கையாக பழுக்க வைத்த பலாப்பழங்கள் அழிப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பலாப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.தொடர்ந்து, பலா காய்களில், ரசாயன ஊசி செலுத்தி காயை பழமாக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்த 400 கிலோ பலாப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்து அழித்தனர்.இதுபோன்ற செயல்களில் மேலும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை