உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / காரின் அதிக வெளிச்சத்தால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்

காரின் அதிக வெளிச்சத்தால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்

புதுக்கோட்டை:மதுரையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ், எதிரே வந்த காரின் எல்.இ.டி., முகப்பு விளக்கின் அதிக வெளிச்சத்தால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. மதுரையில் இருந்து தஞ்சைக்கு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, 40 பயணியருடன் அரசு பஸ் புறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், புனல்குளம் பகுதியில் பஸ் சென்றபோது, எதிரே வந்த ஒரு காரின் எல்.இ.டி., முகப்பு விளக்குகள் அதிக வெளிச்சமாக இருந்தது. அதனால், டிரைவரின் கண்கள் கூசி, கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், அருகே இருந்த பாலத்தில் மோதி, சாலையோரமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 10க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த மூவர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து காரணமாக, தஞ்சாவூர் -- புதுக்கோட்டை சாலையில், 2 கிலோ மீட்டர் துாரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை, கிரேன் உதவியுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஆக 09, 2025 07:38

சிறு வண்டியின் அதிக வெளிச்சத்தால் பெரிய வண்டியின் ஓட்டுனருக்கே இப்படியென்றால்.. நடப்பவர்களும் மிதிவண்டி ஓட்டுபவர்களும் எப்படி ரோட்டில் தவித்து கடக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம் சாமி. இதில் வேற ஹார்ன் சிறு சந்துகளில் கூட சத்தமாக பயன்படுத்துகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை