உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / டிபன் விலை உயர்வு அதிகாரிகள் ஆய்வு

டிபன் விலை உயர்வு அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை, கீரமங்கலம் பகுதியில் டீக்கடை உரிமையாளர்களை கண்டித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், 'கீரமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள் திடீரென விலையேற்றி உள்ளனர்.'எந்தவித விலைவாசியும் ஏறாத நிலையில், டீ, பலகாரம் விலை ஏற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் டீ குடிப்பதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இது குறித்து, நம் நாளிதழில், 13ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி நேற்று, ஆலங்குடி தனி தாசில்தார் ரமேஷ் நேரில் ஆய்வு செய்து, ஏன் இந்த விலையேற்றம் குறித்து விசாரித்தார். அதுபோல, உணவு பாதுகாப்பு துறை திருவரங்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கசாமி கீரமங்கலம் பகுதியில், டீ ஹோட்டல்களில் டீ யின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து, ஆய்வு செய்தார். ஒரு கடையில் தரமற்ற டீ துாள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி