மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
திருமயம்,:திருமயம் பகுதிகளில் கார்த்தி எம்.பி.,யை கலாய்த்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கக்கோரி காங்கிரசார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, லோக்சபா தேர்தலில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.தொடர்ந்து, சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருமயம் பகுதி முழுதும், 'சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரத்தை காணவில்லை என்றும், 'கண்டா வரச் சொல்லுங்க, கையோடு கூட்டி வாருங்க, என்ற கர்ணன் பட பாடலை அச்சிட்டு தொலைந்து போன நாள், பார்லிமென்ட் உறுப்பினரான நாள் முதல் என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.திருமயம் நகர காங்., தலைவர் அன்பழகன், 58, திருமயம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போஸ்டர்களை கார்த்தி ஆதரவாளர்கள் கிழித்து வருகின்றனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025