மேலும் செய்திகள்
வினாடி - வினா'
06-Nov-2024
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வசிப்பவர் அய்யப்பன், 35; சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தங்கலட்சுமி, 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று அதிகாலை, முகமூடி அணிந்த திருடர்கள் அய்யப்பன் வீட்டின் முன் கதவை உடைத்து, உள்ளே துாங்கிக் கொண்டிருந்த தங்கலட்சுமி, மாமியார் பாக்கியசெல்வி, 57, ஆகியோரை கத்தியை காட்டி, இருவர் கை, வாயை கட்டி போட்டு, 'பீரோ சாவியை கொடு; குழந்தைகளை கொன்று விடுவேன்' என, மிரட்டியுள்ளனர்.பீரோ சாவியை கைப்பற்றி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர். அய்யப்பனின் சகோதரர் சுரேஷ், நேற்று காலை அய்யப்பன் வீட்டிற்கு சென்ற போது, தங்கலட்சுமி, பாக்கியசெல்வி கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Nov-2024