உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கழிப்பறையை சுத்தம் செய்த பள்ளி மாணவர்களால் அதிர்ச்சி

கழிப்பறையை சுத்தம் செய்த பள்ளி மாணவர்களால் அதிர்ச்சி

புதுக்கோட்டை: அரசு பள்ளியில், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 30 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஜூலை 10ம் தேதி, பள்ளி மாணவர்கள், அங்குள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்துள்ளனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பள்ளி தலைமை ஆசிரியை கலா கூறியதாவது:பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு, நமணசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராணி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வருவதற்கு முன், காலை உணவு திட்ட சமையலராக இருக்கும் வீரம்மாள், தன் மகன் மற்றும் ஒரு மாணவரை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்துள்ளார். அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களிலும் பரவ செய்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி