உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / திருநாமத்துக்காணி கல்வெட்டு புதுகை அருகே கண்டெடுப்பு

திருநாமத்துக்காணி கல்வெட்டு புதுகை அருகே கண்டெடுப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே ஆதனப்பட்டியில், சோழர் கால திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ள இது, ௧௩ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக தெரிகிறது. தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் மேற்கொண்ட களஆய்வில், இந்த கல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, மணிகண்டன் கூறியதாவது: வயல்வெளியில் சாய்ந்த நிலையில், நான்கு பக்கங்களிலும் சூலக்குறிகளுடன் கல்வெட்டு கிடைத்துள்ளது. ஒரு பக்கத்தில் சூலக்குறியுடன், காளையின் வரைகோட்டுருவம் காட்டப்பட்டுள்ளது. இதன் மேற்புறத்தில் சூரியன், சந்திரன் காட்டப்பட்டுள்ளது. கடந்த, 13ம் நுாற்றாண்டில் திருநாமத்துக்காணியாக நிலதானம் வழங்கப்பட்டதை குறிக்கும் இக்கல்வெட்டு, மூன்று பக்கங்களில், 23 வரி களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் வரிகள் சிதைந்து காணப்படுகின்றன. கல்வெட்டிலுள்ள நிலவியல் பகுதியிலேயே, இந்த வயல் திருநாமத்துக்காணி எனும் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. மேலும், 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனுாரங்குளம் மற்றும் ஆதனவயல் என்ற பெயர் மாறாமல், அதே பெயருடன் இன்றளவும் வழக்கத்தில் இருப்பது, பண்பாட்டு தொடர்ச்சியை காட்டுகிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி