உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த பெண் எஸ்கேப்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்த பெண் எஸ்கேப்

கோட்டைப்பட்டினம்: மீனவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி, 1.5 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் தலை மறைவானார். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில், 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களிடம், அதே பகுதியில் வசித்த வசந்தி, 45; ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு போன்றவற்றை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தார். வசந்தியிடம், 1 முதல் 5 லட்சம் ரூபாய் வரை, மீனவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி வந்துள்ளனர். மூன்று மாதத்திற்கு முன் வசந்தி தலை மறைவானார். மொபைல் போனில் தொடர்பு கொண்ட மீனவர்களிடம், 'உறவினருக்கு உடல்நிலை சரியில்லை. கவனிக்க வேண்டி உள்ளது. விரைவில் வந்து உங்கள் பணத்தை கொடுத்து விடுகிறேன்' என கூறியுள்ளார். ஆனால், ஊருக்கும் வரவில்லை; பணத்தையும் தரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த மீனவர்கள், பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தி நேற்று போலீசில் புகார் அளித்தனர். கோட்டைப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ