சிறுமியை தொந்தரவு செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ஸ்ரீதர்ராஜ், 23; தனியார் நிறுவன ஊழியர். இவர் புதுக்கோட்டையில், கடந்த ஜூலை மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் புகாரில், புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீதர்ராஜை கைது செய்தனர். புதுக்கோட்டை மகிளா கோர்ட் நீதிபதி கனகராஜ் விசாரித்து, ஸ்ரீதர்ராஜ்க்கு போக்சோ சட்டத்தில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.சிறுமிக்கு, தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.