உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டு வசதி வாரிய பிளாட்கள் :விண்ணப்பித்தோர் ஏமாற்றம்

வீட்டு வசதி வாரிய பிளாட்கள் :விண்ணப்பித்தோர் ஏமாற்றம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய பிளாட்டுகள் விற்பதாக கூறி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்து பல லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இருப்பினும் பிளாட்கள் ஒதுக்கீடு செய்யாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தி.மு.க., ஆட்சியில் விற்கப்படாமல் இருந்த காலிமனைகளை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகம் சேதுபதி நகரில் உள்ள 98 பிளாட்டுகள் விற்கப்படுவதாக அறிவித்தனர். பொதுமக்கள் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குவிந்தனர்.'ஏ' பிரிவு பிளாட்டுக்கு விண்ணப்பம் 100, பதிவு கட்டணம் 200 ரூபாய் எனவும் 'பி' பிரிவு பிளாட்க்கு விண்ணப்பம் 100, பதிவு கட்டணம் 150 ரூபாய் என நிர்ணயம் செய்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகின. பல மாதங்களாகியும் குலுக்கல் நடத்தவில்லை. ஏமாற்றமடைந்த மக்களோ, வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை தினமும் முற்றுகையிட்டு வருகின்றனர். எப்போது குலுக்கல் நடத்தப்படும். பிளாட்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரியாத நிலையில் ஏமாற்றத்தில் உள்ளனர். கட்டுமானப்பொருட்கள் உயர்ந்து வருகிறது. தாமதமாக பிளாட்கள் ஒதுக்கீடு செய்தால் அப்போது கடன் வாங்கி தான் வீடு கட்ட முடியும் என விண்ணப்பித்தவர்கள் கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை