உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உள்ளாட்சி தேர்தல்: பதட்ட பகுதிகள் கணக்கெடுப்பு

உள்ளாட்சி தேர்தல்: பதட்ட பகுதிகள் கணக்கெடுப்பு

ராமநாதபுரம்:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான பகுதிகள் பற்றி கணக்கெடுத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டங்களும் அந்தந்த மாவட்ட தலைநகர்களில் நடந்து வருகிறது. கள்ள ஓட்டு போட முயற்சிக்கும் பகுதிகள், கோஷ்டி பூசல், ஜாதி ரீதியான கலவரம், கட்சி ரீதியான சண்டைகள், தேர்தலுக்கு முன்பாக முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி வி.ஏ.ஒ.,க்கள், உளவு பிரிவு, தனிப்பிரிவு போலீசார் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.இதனடிப்படையில் பதட்டமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், தேர்தல் அமைதியான முறையில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை