| ADDED : ஜூலை 05, 2024 10:56 PM
கீழக்கரை : கடலாடி கிழக்கு ஒன்றிய மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தை ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா குழு நம்பு ராஜன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், ஏர்வாடி பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தின் படி தகுதி உள்ளவர்களுக்கு வேலை வழங்கிடவும், குடிநீர் பிரச்னையை சரி செய்து காவிரி குடிநீர் முறையாக கிடைக்கவும், ஏர்வாடி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் செவிலியர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர்.மாநில குழு உறுப்பினர் கற்பகம், மாவட்ட செயலாளர் காசிநாதன், மாவட்ட செயற்குழு முத்து ராமு, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.