உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம்: காரில் கடத்தப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போலீஸ் எஸ்.ஐ., முத்து, தனிப்பிரிவு போலீஸ்காரர் கலைவாணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்த போது 30 மூடைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. டிரைவர் தப்பி ஓடினார். அரிசியுடன் காரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி