உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை

ராமநாதபுரம் : பரமக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பாம்பூரை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் 44. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது 2021 டிச.9ல் கதவை தட்டி திறக்குமாறு அச்சுறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அக்கம்பக்கத்தினருக்கு அலைபேசியில் தெரிவித்து காப்பாற்றுமாறு கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் வரவே வெங்கட கிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார். சிறுமி அளித்த புகாரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வெங்கடகிருஷ்ணனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை