உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாலிநோக்கம் கடற்கரையில் 2468 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தவிருந்தது பறிமுதல்

வாலிநோக்கம் கடற்கரையில் 2468 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தவிருந்தது பறிமுதல்

வாலிநோக்கம்:ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2468 கிலோ பீடி இலைகளை கைப்பற்றி தப்பிய மர்மநபர்களை மரைன் போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் கடலோர பகுதியிலிருந்து சமீப காலமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம், மஞ்சள், வலி நிவாரணி, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடலில் சீலா மீன்பாடு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடலோரத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் தலா 30 கிலோ எடையுள்ள 85 சாக்கு மூடைகளில் 2468 கிலோ பீடி இலைகள் பார்சல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வாகனம், பீடி இலைகளை அவர்கள் பறிமுதல் செய்து வாலிநோக்கம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் குறித்து மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி