உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கையில் 3 தமிழக மீனவர்கள் விடுதலை 

இலங்கையில் 3 தமிழக மீனவர்கள் விடுதலை 

ராமநாதபுரம்:நாட்டுப்படகு இன்ஜின் பழுதால் இலங்கையில் கரை ஒதுங்கி கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க மே 16ல் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். இன்ஜின் பழுதானதால் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மாதகல் கடற்கரையில் படகு கரை ஒதுங்கியது.படகில் இருந்த மகேஷ் 23, வாஞ்சிநாதன் 25, ரஞ்சித் 27, ஆகிய மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். இது கீழமை நீதிமன்றம் என்பதால் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றம் வழியாக விடுதலை செய்யப்படுவார்கள் என மல்லாகம் நீதிபதி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ