உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடுக்கடலில் வீசப்பட்ட 4.7 கிலோ தங்கம் மீட்பு

நடுக்கடலில் வீசப்பட்ட 4.7 கிலோ தங்கம் மீட்பு

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதி, இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், தமிழகத்திலிருந்து படகில் கஞ்சா, பீடி இலை, சமையல் மஞ்சள், கடல் அட்டை, வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. மேலும், இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் அதிகாலை இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்கரையிலிருந்து, தமிழகத்திற்கு தங்க கட்டிகளை படகில் கடத்த இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. கடற்படையினர் ரோந்தை தீவிரப்படுத்தினர்.சந்தேகத்திற்கிடமாக சென்ற படகை நிறுத்த முயன்றபோது, பார்சல் ஒன்றை கடலில் வீசி அந்த மர்ம நபர்கள் தப்பினர். கடற்படை வீரர்கள் மற்றும் 'ஸ்கூபா' டைவிங் வீரர்கள் உதவியுடன் அந்தப் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை தேடினர்.அப்போது பார்சல் ஒன்றில் 4.700 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.அவற்றை கொழும்பு சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த தங்க கட்டிகளை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடல் வழியாக கடத்தியதும், இதற்கு பதிலாக தமிழகத்தில் இருந்து கஞ்சா ஏற்றி வர இருந்ததும் தெரிந்தது. கடத்தல் தொடர்பாக இருவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை