ஜாமினில் வந்தவர் கொலையில் 5 பேர் கைது
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்த மோகனை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.முதுகுளத்துார் அருகே புழுதிகுளத்தில் கோபால்சாமி 40, முன்விரோதம் காரணமாக மே 30ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அதேகிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, மோகன் 48, பரமேஸ்வரி, சிலையம்மாள், வாணியை கீழத்தூவல் போலீசார் கைது செய்தனர். மோகன் நிபந்தனை ஜாமின் பெற்று கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் ஆக.,20 முதல் கையெழுத்திட்டு வந்தார். செப்.,8 காலை 11:00 மணிக்கு கையெழுத்திட்டுவிட்டு கண்மாய்க்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொன்றனர். கோபால்சாமி கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்த அவரது உறவினரான பரமக்குடி பாலாஜி 27, உச்சிப்புளி ஜெயராஜ் 25, சோழவரம் ஜான்சன் 24, வேந்தோணி கபில்குமார் 23, வாணி கலைக்கண்ணனை 20, நேற்று போலீசார் கைது செய்தனர்.