உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆயுதங்களுடன் திரிந்த 5 பேர் கைது

ஆயுதங்களுடன் திரிந்த 5 பேர் கைது

கமுதி : கமுதி--சாயல்குடி ரோடு அரண்மனை மேடு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரோடு பகுதியில் கமுதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த காரை சோதனை செய்தனர். காரில் இருந்த 5 இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.காரை சோதனை செய்த போது அரிவாள், வாள் இருந்தது தெரிய வந்தது. கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து ஈரோடு கருப்பையா மகன் சூரியபிரகாஷ் 23, நினையூர் முருகன் மகன் மணிவேல் 21, ஊ.கரிசல்குளம் பாண்டி மகன் திவாகரன் 21, பசும்பொன் வெள்ளைச்சாமி மகன் அய்யமூர்த்தி 23, கமுதி பஷீர்முகமது மகன் நல்ல முகமது 23, ஆகியோரை கைது செய்து ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ