ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் 72 புகார் பெறப்பட்டு 52 திருமணங்கள் நிறுத்தம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை குழந்தை திருமணங்கள் குறித்து 72 புகார்கள் பெறப்பட்டு 52 குழந்தை திருமணங்கள்நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடக்கிறது. உரிய வயதை அடையாத பெண் குழந்தைகளை திருமணம் செய்வது தொடர்கிறது. இதனை தடுக்க குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு, அமைப்புகள் செயல்பட்டு குழந்தைகள்திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர். 2024 ஜன., முதல் இதுவரை 72 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 52 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 3 புகார்கள் திருமண வயதை எட்டியவர் செய்த திருமணம். 8 குழந்தை திருமணங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 வழக்குகளில் சி.எஸ்.ஆர்., போலீசாரால்போடப்பட்டுள்ளன. தொடர்ந்து குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. வட்டார அளவில், கிராமப்புறங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதால் குழந்தை திருமணங்கள் குறைந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் மட்டும் 17 திருமணங்கள் குறித்த புகார்கள் பெறப்பட்டுள்ளன.அதே நேரத்தில் ஜூலை, ஆக., மாதங்களில் குறைந்துள்ளன என குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.