உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோவில் விழாவில் கல் வீசி தாக்கிய 8 பேர் கைது

கோவில் விழாவில் கல் வீசி தாக்கிய 8 பேர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே தேர்போகி கிராமத்தில் ஒரு தரப்பினருக்கு சொந்தமான மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு தரப்பினராக பிரிந்து கர்ணன் தலைமையிலும், மாடசாமி தலைமையிலும் செயல்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கோவிலில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கல்வீசி தாக்கினர். இதில், தேவிப்பட்டினம் எஸ்.ஐ., செல்வம் காயமடைந்தார்.தேர்போகி வி.ஏ.ஓ., அன்சர் ராஜா புகாரின்படி, தேவிப்பட்டினம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து, 8 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை