உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களை செப்., 5 வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆக.26ல் ராமேஸ்வரத்தில் இருந்து 430 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு இரண்டு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து கொண்டு தப்பினர்.இதில் மரியசியா என்பவரது படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இப்படகை மடக்கி பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் கிங்சன் 38, மெக்கான்ஸ் 34, ராஜ் 48, இன்னாசி ராஜா 48, சசிகுமார் 45, மாரியப்பன் 54, அந்தோணியார் அடிமை 64, முனியசாமி 23, ஆகியோரை கைது செய்து படகுடன் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மீனவர்கள் மீது மீன்துறையினர் வழக்கு பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை செப்., 5 வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஆக 28, 2024 09:56

எத்துணை தடவை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்று ராமேஸ்வர மீனவர்கள் ஆடம் பிடிப்பது நல்லதல்ல . ராமேஸ்வர மீனவர்களுக்கு இந்திய எல்லை பற்றி மிகநன்கு தெரியும். இதையும் தாண்டி இலங்கை கடலில் வலை வீசி மீன் பிடிப்பது ஏன் . இலங்கை மீனவர்களும் தமிழ் பேசும் இலங்கையினர்தான். அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள். உங்களது பேராசைக்கு இலங்கை தமிழ் மீனவர்களை பலிகொடிக்காதீர்கள். மத்திற்குரிய மோடி ஜி பதவிகளங்களில் தமிழ் மீனவர்கள் எவரும் சுட்டுக்கொள்ளப்படவில்லை


சமீபத்திய செய்தி