உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறந்தவெளி பார் ஆக மாறிய செயல்படாத மீன் மார்க்கெட்

திறந்தவெளி பார் ஆக மாறிய செயல்படாத மீன் மார்க்கெட்

கீழக்கரை : கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மீன்மார்க்கெட் செயல்படாமல் உள்ளதால் அவ்விடம் சமூகவிரோதிகள் மது அருந்தும் 'பார்' ஆக மாறியுள்ளது.கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த 1995ல் மீன் மார்க்கெட்டில் 30 கடைகள் கட்டப்பட்டது.தொடர் பராமரிப்பு இன்றி கட்டடம் சேதமடைந்து 6 மாதங்களாக மீன் மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.சேதமடைந்த பயன்பாடற்ற மீன் மார்க்கெட்டில் முன்பு இரவு நேரங்களில் மதுபானம் குடித்தவர்கள் தற்போது பகலிலும் தொடர் மதுபான 'பார்' ஆக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டுக்கு வரக்கூடிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த பயன்படற்ற மீன் மார்க்கெட் கட்டடத்தை இடித்து அகற்றவும், மது அருந்துபவர்கள் மீது கீழக்கரை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி