மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
10 hour(s) ago
கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த மாணவர்களுக்கு மக்கள் பாராட்டு
12 hour(s) ago
விழிப்புணர்வு
15 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
15 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
15 hour(s) ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி கிராமத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாயில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயம் செய்யவும், பொதுமக்கள் பயன்படுத்தியும் வந்தனர். தற்போது தண்ணீர் வறண்டு போனதால் மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.கொண்டுலாவி கிராமத்தில் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் ஜாதி, மதம், பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.மீன்பிடி உபகரணங்களான கச்சாவலை, ஊத்தா, கூடைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்களை பிடித்தனர். பிடிப்பட்ட மீன்களை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். அவரவர் வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்த பின் சாப்பிடுவார்கள். மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதால் ஆண்டுதோறும் நல்ல மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
10 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago