உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கரை ஒதுங்கிய டால்பின்

கரை ஒதுங்கிய டால்பின்

வாலிநோக்கம்,:ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு 4 அடி நீளமுள்ள 70 கிலோ அரியவகை பாட்டில் மூக்கு டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.அப்பகுதி மீனவர்கள் தகவலின் பேரில் கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் கனகராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இறந்த டால்பினை மீட்டனர். ஏர்வாடி கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் கடலில் ஏற்பட்ட தட்பவெப்ப சீதோஷ்ண நிலையால் இறந்திருக்கலாம் என்றனர். உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட டால்பினை வாலிநோக்கம் கடற்கரை அருகே வனத்துறையினர் புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி