உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் ஆடிப்பூரம் கொண்டாட்டம்

ராமேஸ்வரம் கோயிலில் ஆடிப்பூரம் கொண்டாட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடந்த ஆடிப்பூரம் விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா ஜூலை 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் ஆடித் திருவிழா நடக்கிறது. 10ம் நாள் விழாவான நேற்று கோயிலில் இருந்து காலை 9:30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.பின் மதியம் 12:00 மணிக்கு கோயில் சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் வாரிக்கொடுத்தல், கன்னிப் பெண் பூஜை, பூரம் தொழுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் 11ம் நாளான இன்று (ஆக. 8) கோயிலில் இருந்து காலை 6:30 மணிக்கு அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும், காலை 11:00 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடகி தபசு மண்டகபடியில் எழுந்தருளல், மதியம் 3:00 மணிக்கு மேல் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை