| ADDED : ஆக 07, 2024 07:38 AM
திருவாடானை, : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம் நடந்தது.திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 3:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்திருளிய சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5:00 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. விழாவில் தேவஸ்தான செயல்அலுவலர் பாண்டியன், மற்றும் 22 கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர். நாளை (ஆக. 8) அம்பாள் தபசு, மறுநாள் திருக்கல்யாணம், ஆக.11ல் சுந்தரர் கைலாய காட்சி, மறுநாள் உற்ஸவ சாந்தி நடைபெறும். விழா நாட்களில் கேடயம், பல்லக்கு, காமதேனு, அன்னம், கிளி, வெள்ளி ரிஷபம் போன்ற பல வாகனங்களில் சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடக்கிறது.