ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார்,கடலாடி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024--25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே 10 முதல் ஜூன் 6 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தொழிற்பயிற்சி மையங்களில் ஓராண்டு பிரிவுகள்:கணினி இயக்குபவர், சூரிய மின்சக்திவியலாளர், தையல் தொழில் நுட்பம், இண்டஸ்ட்ரி 4.0 தொழிற்பிரிவு இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன்.இரண்டு ஆண்டு தொழில் பிரிவுகள்:கம்மியர் மோட்டார் வாகனம், பொருத்துநர், கடைசலர், மின்சார பணியாளர், கம்பியாள், பின்னலாடை தொழில் நுட்பவியலாளர், இயந்திர படவரைவாளர், கம்மியர் மின்னணுவியல்,குளிர் பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், இயந்திர வேலையாளர், இண்டஸ்ட்ரி 4.0, தொழிற்பிரிவுகளான அட்வான்ஸ்டு சி.என்.சி, மெஷினிங்டெக்னீசியன், கம்மியர் மின் வாகனம்.இந்த தொழிற்பிரிவுகளுக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில்பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க உதவிடும் வகையில் மாணவர்களுக்கு ராமநாதபுரம்மாவட்டத்திலுள்ள பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார், கடலாடி, தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ரூ.50 விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், ஜி பே வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யஜூன் 7ம் தேதி கடைசி நாளாகும்.மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். மேற்காணும் தொழிற் பிரிவுகள் அனைத்துக்கும் 8ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 14 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள், பெண்களுக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு வயதுவரம்பு ஏதுமில்லை. பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுசான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆன்ட்ராய்டு கைப்பேசி கட்டாயம்மற்றும் மின்அஞ்சல் முகவரியுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் பரமக்குடி, முதுகுளத்துார், ராமநாதபுரம், கடலாடிக்கு அலுவலக நேரத்தில் நேரில் சென்றால் இலவசமாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து தரப்படும்.பயிற்சியில் சேர்பவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை ரூ.750 விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும்.பயிற்சியாளர்களுக்குதனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.கூடுதல் விபரங்களுக்கு தொலைபேசி எண் பரமக்குடி 04564- 231303, ராமநாதபுரம் 04567 -290212 முதுகுளத்துார் 04576- 222114, கடலாடி 63836 54943 ல் தொடர்பு கொண்டு பயனடையலாம்.