உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் அக்னி வீர் வாயு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு

பரமக்குடியில் அக்னி வீர் வாயு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு

பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த அக்னி வீர் வாயு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அக்னி வீர் வாயு (விமானப் படை) படையில் சேர தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன்படி 17 முதல் 21 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மத்தியில் சென்னை தாம்பரம் விமானப்படை தேர்வு மைய அலுவலர் விங் கமாண்டர் வினம்ரதா ஷர்மா பேசினார்.தொடர்ந்து நாட்டிற்காக சேவை செய்ய ஆசையும், விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் வாரண்ட் ஆபீசர் சவுகான், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கலந்து கொண்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ