| ADDED : ஆக 23, 2024 04:02 AM
தேவிபட்டினம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நர்த்தன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு ஆக.19 ல் விக்னேஸ்வரர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு யாகசாலையில் பூஜை செய்த புனித நீர் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 10:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாலை 5:30 மணிக்கு சங்கடகர சதுர்த்தி அபிஷேகம் நடந்தது. விழாவில் அறங்காவலர் பாஸ்கரன், ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆணையாளர் ஞானசேகரன், ஹிந்து சமூக சபை தலைவர் பாஸ்கரன், உதவி தலைவர் யோகேஸ்வரன், செயலாளர் பரமேஸ்வரன், உதவி செயலாளர் லெட்சுமணன், பொருளாளர் குணசேகரன் நிர்வாகக் குழுவினர் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். முத்துமாரியம்மன் கோயில்
திருவாடானை வடக்குதெரு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக நடந்த அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 9:15 மணிக்கு சிவாச்சாரியார் ஆதிரெத்தினம் தலைமையில் வேதமந்தரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.