உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மினி பார் ஆன அல்லி கண்மாய்  ஆக்கிரமிப்பு தடுப்பு வேலி சேதம்  நகராட்சி நடவடிக்கை தேவை

மினி பார் ஆன அல்லி கண்மாய்  ஆக்கிரமிப்பு தடுப்பு வேலி சேதம்  நகராட்சி நடவடிக்கை தேவை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அல்லிக் கண்மாய் தடுப்பு வேலியை அகற்றப்பட்டுள்ளதால் அவ்விடத்தை மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி அல்லிக்கண்மாய் பகுதியில் நீர்நிலைஆக்கிரமிப்புகள்கடந்த ஆண்டு அகற்றப்பட்டு, அவ்விடத்தில்மீண்டும் வீடுகள் வராத வகையில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கண்காணிப்பு இல்லாததால் தற்போதுசிலர் தடுப்பு வேலியை சேதப்படுத்திவிட்டு மது அருந்துவது, கஞ்சா பயன்படுத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.மீண்டும் அல்லிக்கண்மாய் நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்யவாய்ப்பு உள்ளது. எனவே இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சேதமடைந்த தடுப்பு வேலியை நகராட்சி சீரமைக்க வேண்டும். கண்மாய்க்குள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை