உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முன்னாள் மாணவர் சங்க ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் மாணவர் சங்க ஆலோசனைக் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பர்லா அப்பாஸ், செயலாளர் பகுர்தீன் முன்னிலை வகித்தனர்.அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக சுற்றுப்புற கிராமங்களில் தொடக்கப்பள்ளி கல்வியை முடித்து வெளிவரும் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்துதல், மாணவர் சேர்க்கை வலியுறுத்தி கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்தனர்.மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், அரசு வேலைவாய்ப்பில் உள்ள முன்னுரிமைகள் குறித்தும், மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைச் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பரக்கத் அலி, நிர்வாகிகள் மதிவாணன், அயூப்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை